“பொன்.மாணிக்கவேலின் பதவிநீட்டிப்பு குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது”. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன். மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பு குறித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சிலைகடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் ,சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசு மீதும் ,தனது பதவி காலத்தை நீடிக்க கோரியும் யார்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதே கோரிக்கையை வலியுறுத்தி ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.
பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பு வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருப்பதால் தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை மறுத்த போன்.மாணிக்கவேலும் ட்ராபிக் ராமசாமியும் எதிர்த்து வாதாடினார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது, பொன். மாணிக்கவேலின் பதவிக்கு ஏற்கனவே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி பதவி நீட்டிப்பு குறித்த வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.