நெஞ்சை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஓவியர் பிரணவ் சந்திப்பு !
பிரணவ் என்ற 21 வயது நிரம்பிய B.COM பட்டதாரி. இவர் பிறக்கும்போதே இரு கைகள் இல்லாமல் பிறந்தார். அவர் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தனது கால்களையே பயன்படுத்துவார். கால்களில் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார். இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரணவ் உடன் செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் பிரணவ் தனது கால்களால் வரைந்த ரஜினிகாந்த் ஓவியத்தை அவரிடமே கொடுத்தார். தனது கால்களால் செல்போனை பிடித்தவாறு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. காண்போரின் கண்களை நெகிழவைத்தது, ரஜினி பிரணவ் சந்திப்பு.
சில மாதங்கள் முன்பு அவர் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அவர்களை சந்தித்தார். மேலும் பிரணவ் வரைந்த சச்சின் படத்தை சச்சினுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அவர் திறமையை கண்டு வியந்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.