“என் வாழ்நாளில் ரஜினிக்காக மட்டும் தான் இப்படி செய்தேன்” மனம் திறந்த நடிகர் பிரித்விராஜ் !!
தமிழில் ஒருசில படங்களில் நடித்துஇருந்தாலும், மலையாள திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். நடிகராக இருந்த அவர் சமீபத்தில் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார். அவர் எடுத்த முதல் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஹீரோவாகவும், நடிகை மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ் என பல ஸ்டார்களை வைத்து “லூசிபர்” என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்த படம் அமோக வெற்றி பெற்று மலையாள திரையுலகில் 200 கோடி வசூலித்த முதல்படமென்ற பெருமையை கைப்பற்றியது. இந்த படத்தில் பிரித்விராஜின் இயக்கம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக முத்திரை பதித்த இவர் அப்போது நடந்த சம்பவங்களை குறித்து பேசியுள்ளார்.
அதை பற்றி பேசிய பிரிதிவிராஜ், லூசிஃபர் படத்தின் வெளியீட்டின் போது ரஜினிகாந்த் அவர்களின் படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை என்னால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. என் சொந்த பட வேலைகளில் நான் அப்போது இருந்தேன். தற்போது அடுத்து வரும் ‘ஆடுஜீவிதம்’ படத்திற்காக நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயாராக வேண்டி இருந்தது. அதனால் ரஜினி உடனான படத்தை என்னால் இயக்க முடியவில்லை. அதனால் அவருக்கு நான் ஒரு மன்னிப்பு குறிப்பை எழுதினேன். என்வாழ்க்கையில் யாருக்கும் நீண்ட மன்னிப்பு குறிப்பை நான் எழுதியதில்லை என கூறினார். அவர் வாய்ப்பை தவறவிட்டாலும் தற்போது, லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து இயக்க இருக்கிறேன் எனவும் கூறினார். ஆனால் சிரஞ்சீவி தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததாக சொல்லப்படுகிறது.
பிரித்விராஜ் தற்போது லூசிஃபர் படத்தின் அடுத்த பாகமான ‘எம்பூரான்’ படத்தை இயக்கி கொண்டிருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் ஐயப்பனும் கோஷியும் படத்திலும் பிசியாக நடித்து கொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.