போலீசாரின் மாஸ் என்கவுன்ட்டர்!! தப்பிக்க முயன்ற நால்வரையும் நாயை போல ஓட விட்டு… முழு விவரம்!!
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலைவழக்கில் கைதான 4 பேரும் அதே இடத்தில்
, அதே நேரத்தில் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர் .
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி என்பவர் கடந்த 27ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சத்தனப்பள்ளி டோல்கேட் அருகே கொடூரமாக எரித்து கொல்லப்பட்டியிருந்தார் .இந்த பயங்கர சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற கூட்டத்திலும் பெரும் சர்சையாக பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஓட்டுநர், கிளீனர் உள்பட 4 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர் . முகமது ஆரிப் 20,ஜொள்ளுசிவா 20, ஜொள்ளுநவீன் 20, சிண்டகுண்டா சென்னை கேஷ்வேலு 20, என்ற 4பெரும் பெண் மருத்துவரை முன்கூட்டியே திட்டமிட்டு நாட்களாக நோட்டமிட்டு இந்த பயங்கர சம்பவத்தை செய்துள்ளனர் .
இந்நிலையில் பொலிஸாரால் கைது செய்ய பட்ட 4வரையும் நேற்று இரவு ப்ரியங்கா ரெட்டி கொலை செய்ய பட்ட இடத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர். நேற்று இரவு முழுக்க 4 குற்றவாளிகளையும் தூங்கவிடாமல் போலீசார் தீவிரமான ட்ரீட்மெண்ட் அளித்து விசாரணை செய்துள்ளனர் . சைபராபாத் கமிஷனர் சஜ்னார் உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் இவர்களை விசாரித்தனர் . பின்னர் அதிகாலை 3:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு 4 பேரையும் அழைத்து சென்று எவ்வாறு குற்றம் செய்தீர்கள் ? என்பதை சொல்லி காட்டுமாறு போலீசார் கேட்டுள்ளனர். முதலில் குற்றத்தை விளக்கிய 4 பேர் பின்னர் வேகமாக அருகில் உள்ள புதருக்குள் சென்று தப்பிக்க முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்தனர் . இதனால் அங்கிருந்த போலீசார் அந்த 4 பேரையும் ஓட ஓட என்கவுண்டரில் சுட்டுள்ளனர் .
இந்த என்கவுண்டரில் முக்கிய குற்றவாளியான முகமது ஆரிப் கடைசியாக சுட்டிக்கொள்ளப்பட்டுள்ளார் . குற்றவாளி 4 பேரையும் நெற்றிப்பொட்டில் அடிவயிற்று பகுதியிலும் சுட்டு கொன்றுள்ளனர் . குற்றவாளிகள் தப்பியோட முயன்றதால் சுட்டுக்கொன்றோம் என போலீசார் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டிருக்கியது என்பது குறிப்பிடத்தக்கது .இது குறித்து பிரியங்கா ரெட்டி அவரின் தந்தை , 10 நாட்களில் தனது மகளுக்கு நீதிகிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது .அதே இடத்தில் அதே நேரத்தில் என்னுடைய பெண் அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்துள்ளது .இப்போது எனது மகளின் ஆன்மா சாந்தியடையும் என கூறியுள்ளார் . போலீசாரின் இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .