மீண்டும் ஒரு கொடூர சம்பவம் ! பள்ளிக்கு சென்ற 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை!!
ராஜஸ்தானில் 6 வயது சிறுமியை வன்புணர்வு செய்து, அவள் அணிந்திருந்த பெல்ட்டை வைத்தே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் டாங்க் மாவட்டம் அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்துவருகிறார். வழக்கம் போல சனிக்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீடுதிரும்பவில்லை. சிறுமி காணாமல் போனதால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிறகு பள்ளிக்கு அருகே உள்ள புதர்களுக்கு இடையே சிறுமி ரத்த வெள்ளத்தில் உள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அவருடைய சீருடை பெல்ட்டினால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்தோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியின் உடலை அருகில் உள்ள சாதத் மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பியதில், சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் மதுபாட்டில்கள், தின்பண்டங்கள், இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமி அணிந்திருந்த பெல்ட்டாலேயே கொன்றிருப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஹைதராபாத் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற சம்பவத்தின் சோகம் மறைவதற்குள், ராஜஸ்தான் நிகழ்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.