“நான் செத்தா ஸ்ரீதேவி கல்லறைக்கு அருகே என் கல்லறை இருக்கனும் ” கடைசி ஆசையை சொன்ன இயக்குனர்.
நடிகை ஸ்ரீதேவியை புதைத்த கல்லறைக்கு அருகிலேயே என்னை தகனம் செய்யவேண்டும், இதுதான் எனது கடைசி ஆசை என இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்
ஆந்திரமாநிலத்தை சேர்ந்த இயக்குனரான ரேம் கோபால் வர்மா தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் எடுக்கும் படம் எல்லாம் சர்ச்சைக்கு உட்படாமல் இருக்காது. படங்கள் மட்டுமல்ல இவரும் பிரபலங்களை பற்றி பேசி அடிக்கடி பிரச்சனைகளில் சிக்கி கொள்ளுவார். பிலிம்பேர், தேசிய விருது போன்ற பல விருதுகளை வாங்கிய இவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமீபத்தில் பதிலளித்துள்ளார். அதில், சார்சைக்குரிய படங்களை எடுப்பதை நீங்கள் எப்போது கைவிட போகீறீர்கள் என பலரும் என்னை கேட்டுவருகின்றனர். சர்சையில்லாத படங்களை நான் எடுக்க வேணுமென எதிர்பார்கிறார்கள். ஆனால் எப்போதும் நான் அதுபோன்ற படங்களை எடுப்பதை நிறுத்த போவதில்லை. எனது வாழ்க்கையையே கூட திரைப்படமாக எடுக்க என்னிடம் யாரும் அனுமதி பெற வேண்டியதில்லை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என கூறினார். மேலும் எனக்கு வாழ்வில் ஒரு மணி நேரம் தான் உயிர் வாழ நேரம் கிடைக்கிறது என்றால் அந்த சிறிது நேரத்தை கூட நடிகை ஸ்ரீ தேவியின் கல்லறையில் வாழ ஆசைப்படுகிறேன்.
எனது கடைசி ஆசை என்னவென்றால், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கல்லறைக்கு பக்கத்திலேயே எனது உடலையும் தகனம் செய்ய வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முடியுமா என பலரும் என்னை கேட்கிறாரகள். அவரது வாழ்க்கையை பற்றி படம் எடுப்பது மிகவும் கடினமானது என இயக்குனர் வர்மா கூறினார்.