இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா? நடிகை ராஷி கண்ணா சொன்ன ரகசியம்!!
தமிழ் திரையுலகில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றவர் நடிகை ராஷி கண்ணா. அந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்கியா மற்றும் சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் ஆகிய படங்களை தொடர்ந்து ரசிகளுக்கு தந்த வண்ணம் உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் விஜய தேவரகொண்டா, நாகசைதன்யா போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் தனியார் சேனல் ஒன்றிற்கு பெட்டியளித்துள்ளார். அப்பெட்டியில் அவரின் சிறுவயது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், 16 வயதிலேயே எனது வயது பையனுடன் டேட்டிங் சென்றுள்ளதாகவும் பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிரபல கிரிக்கெட் வீரரான பும்புராவுடன் காதல் ஏற்பட்டது என்ற தகவல் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, பும்புரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும். வேறு எதுவும் எனக்கு தெரியாது. நான் அவரை சந்தித்தது கூட கிடையாது. இப்படி இருக்க காதல் எப்படி ? அதெல்லாம் வெறும் வதந்தி, உண்மையில்லை, என்று பதில் கூறினார்.