கை குலுக்கி ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வால்…..அட்ராசக்க !!
தமிழ் திரையுலகில் 2018-ம் ஆண்டில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் அறிமுகமானவர் சாக்ஷி. ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல ரசிகர்களை ஈர்த்தார். கவின் மீது காதலில் சிக்கி பின்பு தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாட்டிற்கு ஆண் நண்பருடன் அசத்தலாக ஆடியுள்ளார் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு தொடக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். கல்யாண் சில்க்ஸ், சக்தி மசாலா, மலபார் கோல்ட் போன்ற விளம்பரங்களிலும் மற்றும் திரையுலகின் விருது வழங்கும் விழாவில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
சாக்ஷி பட வாய்ப்புகளுக்காக கொஞ்சம் மாடலிங் போட்டோ ஷூட்களில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கிறார். அவ்வப்போது தாவணியில் தமிழ் ரசிகர்களை கவரும் விதத்தில் தோன்றுகிறார்.