மாமியாரோடு ஆட்டம் போட்ட நடிகை சமீரா ரெட்டி… வயசானாலும் ஸ்டைல் போகல !!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் நடிகை சமீரா ரெட்டி தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் சமீரா முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து அசல், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி அடிக்கடி புகைப்படங்கள் வீடியோ பதிவிட்டு வருகிறார். தற்போது தனது மாமியாருடன் மாடர்ன் உடை அணிந்துகொண்டு அசத்தலாக நடனம் ஆடியுள்ளார். சமீராவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சமீரா ரெட்டி அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து கொண்டு வருகிறார்.