36 வயது இளம் நடிகரும் சந்தானத்தின் நெருங்கிய நண்பருமான சேதுராமன் திடீர் மரணம் !!
கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானார் சேதுராமன்.
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
36 வயதாகும் இவருக்கு சில வருடங்களுக்கு முன்னாள் தான் திருமணம் நடந்தது. தற்போது நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார். இந்த துயர செய்தியை கேட்டு பலர் அதிர்ந்துபோயுள்ளனர். சேதுராமனின் இறந்ததை நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் உறுதிபடுத்தி பதிவு செய்துள்ளார். திரையுலகின் பல பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.