சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் SDPI போராட்டம் !!

December 10, 2019 at 8:08 pm
pc

போராட்டத்தில் குடியுரிமை சட்டத்தின் நகலை எரித்து தங்களது எதிப்பை தெரிவித்தனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் S.D.P.I கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லோக்சபாவில் குடியுரிமை மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் கிளம்பியுள்ளன. டெலீஜ்\டெல்லியில் ஜந்தர் மந்தர், பெங்களூரு சென்னை போன்ற இடங்களில் போராட்டம் வலுப்பெற்றிருக்கிறது.

இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிப்போம் என பாஜக வாக்குறுதியளித்ததை அடுத்து 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது மக்களவை பணிக்காலம் முடிவடைந்ததால் இந்த மசோதா கலவதியானது, பின்னர் புதிய மசோதா நிறைவேற்றப்படும் என மோடி அரசு அறிவித்திருந்தது. இதன் படி இன்று தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்கவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் அம்சம் என்னவென்றால், “கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிவுற்றவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இப்படி குடியுரிமை வழங்கப்படும் அகதிகளுக்கு அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியதாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து சட்ட பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள், என்பது தான் இந்த மசோதாவாகும்.

இந்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் வாதங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், இந்த மசோதா சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டுவரப்படுவதாகவும், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் மேலும் இந்த மசோதாவில் 6 மதத்தவர்களுடன், இஸ்லாமியர்களை சேர்க்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலளித்த அமித் ஷா, இந்த சட்டம் 000.1 % கூட இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், புத்தர்கள், கிறித்துவர்கள் ஆகியோர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாவதால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவர பட்டுள்ளது என தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website