ஷங்கர் டைரக்ஷனில், விஜய்? நண்பனுக்கு பிறகு மீண்டும் கூட்டணி ஆவலுடன் ரசிகர்கள் !!
தளபதி 64க்கு பிறகு தளபதி விஜய், இயக்குனர் ஷங்கருடன் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012-ம் ஆண்டில் ஷங்கர் – விஜய் கூட்டணியில் வெளிவந்த படம் “நண்பன்”. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் இது நேரடி தமிழ் படம் இல்லை. பாலிவுட்டில் நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியான “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக்காகும். அதன் பிறகு தமிழகத்தின் பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் ஷங்கருடன் தளபதி விஜய் எப்போது இணைவார் என விஜய் ரசிகைகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில், இணையதள நிறுவனம் ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஷங்கரிடம் விஜய் ரசிகர்கள் மீண்டும் தளபதியுடன் இணைவது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் “நானும் ரெடி, அவரும் ரெடி எப்போது வேண்டுமானாலும் இனைந்து படம் பண்ணுவோம். அதன் அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என பதிலளித்தார்.
ஷங்கரின் பதில் விஜய் ரசிகர்களை சந்தோச படுத்தியுள்ளது. இதற்கிடையில் விஜய்க்கான கதையை ஷங்கர் தயாரித்து விட்டதாகவும், கதையை விஜயிடம் சொல்லி ஒப்புதல் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது தளபதி 64 ல் பிஸியாக உள்ளார், ஷங்கரும் இந்தியன்-2வில் பிஸியாக உள்ளார். இருவரும் பட வேலைகளை முடித்தபின் புதிய படத்தில் இணைவது குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இவர்களது கூட்டணிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.