ஜப்பான் பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு !! உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள, 3.3 மில்லியன் அபராதம் !!

ஜப்பானில் பாலியல் வழக்கில் சிக்கிய 53 வயதான தொலைக்காட்சி நிருபருக்கு டோக்கியோ நீதிமன்றம் 3.3 மில்லியன் ஜப்பானிய யென் அபராதம் அளித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
டோக்கியோ நகரில் பெண் செய்தியாளராக பணிபுரிந்த, ஷியோரி இட்டோ என்பவர் டோக்கியோ நீதிமன்றத்தில் ஒரு பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார். அதாவது, ஜப்பான் ஒலிபரப்பு துறையில் உள்ள முக்கிய நபரான நோரியுகி யமாகுச்சி என்பவர் கடந்த 2015 ம் ஆண்டு தன்னை ஒரு விருந்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்பதுதான் அந்த குற்றசாட்டு. அந்த குற்றச்சாட்டால் டோக்கியோவே பரபரப்பானது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெண் செய்தியாளருக்கு சாதகமாக அதிரடி தீர்ப்பை வழங்கினார். டோக்கியோ மாவட்ட நீதிபதி ,,53 வயதான யமாகுச்சிக்கு 30 ஆயிரம் டாலரை அதாவது 3.3 மில்லியன் ஜப்பானிய YEN அபராதமாக விதித்தார். இந்த தீர்ப்பு ஜப்பான் பாலியல் வழக்கில் மிகவும் முக்கியமான தீர்ப்பாக விளங்குகிறது. இது குறித்து பேட்டியளித்த பெண் செய்தியாளர் ஷியோரி இட்டோ, எனக்கு சத்தமாக வந்துள்ள தீர்ப்பு எனக்கு மிகவும் வியப்பை தருகிறது ,இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் .எனக்கு நடந்த இந்த சம்பவத்தை புகார் அளித்தபோது அந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என விளக்கமளிக்க சொன்னது எனக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது என தெரிவித்தார்.
