தனிமைப்படுத்திக் கொண்ட ஸ்ருதிஹாசன், அமெரிக்கா சென்று வந்த பிறகு தானே எடுத்த முடிவு
இந்தியாவில் கொரோனா பரவுதலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் பெரும்பாலான நகரங்கள், மாநிலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அரசியல் மற்றும் திரை துறை பிரபலங்கள் பலர் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் கடந்த பத்து நாளைக்கு முன்பு அமெரிக்கா சென்று வந்தார். அரசாங்கத்தின் உத்தரவுக்கு முன்பே தானாகவே முன்வந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன். மேலும் தனது குடும்பத்தினர் அனைவரும் தனித்தனியே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்தார். அதோடு கமல்ஹாசன் சென்னையில் தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் என்ற செய்தியையும் சுருதிஹாசன் தெரிவித்தார்.