“மாநாடு”-க்காக வெய்ட்டு காட்ட களமிறங்கிய STR !!
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படம் பல நாட்களாகவே இதோ அதோ என இழுத்து அடிக்கப்பட்டு கொண்டிருந்தது. இடையில் சிம்பு சபரிமலைக்கு பயணம் எடுக்கவும் படத்தை பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பல விமர்ச்சனைகளையும், தடைகளையும் தாண்டி ‘மாநாடு’ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மாநாடு படத்தில் இணைத்துள்ள கலைஞர்கள் குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமராஜ் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மாநாடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். இசைசூறாவளி யுவான்ஷங்கர் ராஜா இசையமைப்பில், படத்தில் சீனியர் இயக்குனர்களும், நடிகர்களுமான பாரதிராஜா, எஸ்.ஏ சந்திர சேகர் ஆகியோர் படத்தில் இணைந்துள்ளனர். மேலும் வெங்கட்பிரபு படம் என்பதால் வழக்கம் போல பிரேம்ஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைத்துள்ளார்.
இந்நிலையில் மாநாடு படத்தில் ஷுட்டிங் விரைவில் தொடங்கவிருப்பதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதற்காக தன்னை தயார்படுத்திக்கொள்ளும் விதமாக நடிகர் சிம்பு கடின உடற்பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். ஏற்கனவே தனது குண்டான உடலை வெளிநாடு சென்று உடலெடையை குறைத்தார். தற்போது மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைத்து தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் விதமாக, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இந்த வீடியோ படத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் போட, இதனை கண்ட சிம்பு ரசிகர்கள்” காயம் பட்ட சிங்கத்தோட மூச்சு அதோட கர்ஜனையாவிட பயங்கரமா இருக்கும், சிங்கம் களம் இறங்கிடுச்சி” என பதிவிட்டு விடியோவை வைரலாக்கிவருகின்றனர்.