‘நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன்’ சிம்புவை கடுப்பேத்தும் இயக்குனர் …ஏன்டா இப்டி பண்றீங்க .?
கடந்த 2016 -ல் சிம்பு நடித்து வந்த அன்பானவன் , அடங்காதவன் , அசாராதவன் திரைப்படத்தில் நடிக்க ரூ.8 கோடி சம்பளம் என பேசப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடிங்கர் சிம்பு முன்பணமாக ரூ.1.51 கோடி மட்டுமே பெற்று இருந்தார். இப்படத்திற்கு மைக்கல் ராயப்பன் தயாரிப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீதி உள்ள பணத்தை பெற்றுகொடுக்குமாறு தமிழ் திரைப்பட சங்கத்தில் மனுவை அளித்தார் நடிகர் சிம்பு.
ரூ. 6.48 கோடியை தர மறுத்த இயக்குனர் மைக்கல் ராயப்பன் அதே தமிழ் திரைப்பட சங்கத்தில் திரைப்படத்திற்கு ஏற்பட்ட முழு இழப்பையும் உணர்ந்து அவரிடமிருந்து பணத்தை வசூலித்து தருமாறு மனு ஒன்றை அளித்தார்.சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது தனி அதிகாரிகளை அரசு நியமித்துள்ளதால் முன்னாள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாத காரணத்தினால் இரு சங்கங்களின் தனி அதிகாரிகளை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டும் விஷால் கேட்டுக்கொண்டார்.இன்று இதனை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி மனுவில் சிறிய திருத்தம் மேற்கொண்டு மறு மனுவை அளிக்குமாறு கூறி இந்த வழக்கை வருகின்ற ஜனவரி -3 ம் தேதி அன்று ஒத்திவைத்துள்ளார்.