“ஏ.ஆர்.ரகுமான் மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது” – நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் !!
சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வந்து, பின்னர் வெள்ளித்திரையில் காமெடி வேடங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான “நம்ம வீட்டு பிள்ளை” படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 20ம் தேதி “ஹீரோ “திரைப்படம் வெளியாகவுள்ளது .
அடுத்த கட்டமாக “இன்று நேற்று நாளை படத்தை” இயக்கிய ரவிக்குமார் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை கேட்டுள்ளார். இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டு அதன் 75% படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை “ரகுல் ப்ரீத் சிங் “நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் .
இந்த படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது, நான் சினிமாவிற்கு நடிக்க வரும் போது, இயக்குனர் ஷங்கர் சார் இயக்கத்தில் நடிக்கவேண்டும் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் பாடலுக்கு நடனமாட வேண்டும் என்ற கனவோடு வந்தேன். என் நீண்ட நாள் கனவில் ஒன்று இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் 3 பாடல்கள் ஏ.ஆர். ரகுமான் ரெகார்ட் செய்துள்ளார் என கூறினார்.