டாக்டர் சிவகார்த்திகேயன் !! அட.. இது படத்தோட டைட்டில் தான் !!
“நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் குடும்பங்களின் நன்மதிப்பை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார். தற்போது ஹீரோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். “ஹீரோ” படமும் வெளியிட தயாராக உள்ளது. இன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் “கோலமாவு கோகிலா” படத்தை இயக்கிய நெல்சன் படத்தை இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். இன்று படத்தின் டைட்டிலை “டாக்டர்” என சிவகார்த்திகேயனின் சொந்த ப்ரொடக்ஷன் கம்பெனி வெளியிட்டது.
“டாக்டர்” ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாக படத்தின் இயக்குனர் நெல்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். படத்தின் டைட்டில் சமூகவலைதங்களில் வைரலாகி வருகின்றது.