முட்டாள்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதே !! “ஜாலியா இருக்க பட்டாசு வெடிக்கிறார்கள்”.. வார்த்தை போர் !!
நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூர் ட்விட்டரில் நேற்று நடந்த சம்பவங்களை பற்றி கருத்து பதிவிட்டுள்ளார். நேற்று மக்கள் விளக்கு மற்றும் டார்ச் லைட் பதிலாக பட்டாசுகள் வான வேடிக்கைகளும் வெடித்து அமர்க்கள படுத்தினர். அவர் பதிவிட்ட கருத்தில் நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை பட்டாசு சத்தம் அதிகமாக உள்ளது. ஏன் இப்படி மக்கள் செய்கிறார்கள் என பதிவிட்டார்.
இது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த கருத்துக்கு எதிராக ஒரு நபர் சோனம் கபூர் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கு என்ன அர்த்தம் என சோனம் கபூரை கேட்டுள்ளார்.
எரிச்சலடைந்த சோனம் கபூர் ஒரு விஷயத்தை செய்வதற்கு நேரம் காலம் உள்ளது என தெரிவித்து, முட்டாள்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதே !! அவர்கள் கீழே இழுத்து சென்று மோசமாக நடந்துகொள்வார்கள்” என்ற மார்க் டுவைன் என்பவரின் சொற்களை பதிவிட்டுள்ளார்.
சோனம் கபூருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது அப்போது அசோக் பண்டிட் என்னும் இயக்குனர் சோனம் கபூரை கடுமையாக சாடினார், சோனம் கபூரின் கருத்துக்கு எதிர் கருத்து கூறிய அசோக், இது தீபாவளி, தீபாவளி இல்லை என்பது முக்கியமில்லை, மக்கள் ஜாலியா பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் இந்த கஷ்டத்தை காலத்திலேயும் ஜாலியா பட்டாசு வெடித்து கொண்டாடுவதில் என்ன இருக்கு..”
பிறகு கடுப்பான சோனம் கபூர் அமைதியாக பதிலுக்கு பதில் கூறுவதை நிறுத்திவிட்டார்.