பாகிஸ்தான் உடனான உறவை மோடி ஆட்சியில் இருக்கும் வரை மேம்படுத்த முடியாது – முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி

February 26, 2020 at 10:10 am
pc

பாகிஸ்தானில் PSL 20-20 லீக் போட்டியின் போது ஒரு பேட்டியில் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெட்டியில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் உறவுகள் மீண்டும் தொடங்க முடியுமா? என கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அப்ரிடி, ‘ எல்லையின் இருபுறமும் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் இருநாட்டிற்கு இடையே பயணிக்க விரும்புகிறார்கள். மோடி என்ன செய்ய விரும்புகிறார் அவருடைய நோக்கம் என்னவென்று இந்திய மக்களைப்போல் எனக்கும் முழுமையாக புரியவில்லை’ என்று கூறினார்.

மேலும் மோடியின் சிந்தனை எதிர்மறையை நோக்கியது, அவர் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த முடியாது. மோடி ஆட்சியில் இருக்கும் வரை, இந்தியாவில் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை என கூறினார்.

இந்தியா பாக்கிஸ்தான் ஆகிய இரு அணிகளும் பல நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் சந்திக்கின்றன. ஆனால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் 2013 ஆம் ஆண்டு பிறகு இருதரப்பு தொடரில் எந்தவொரு போட்டியும் பாகிஸ்தானில் இந்தியாவில் விளையாடவில்லை. இந்திய அணி இறுதியாக 2006 பாகிஸ்தான் சென்றது 2006 இல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது ராகுல் திராவிட் கேப்டனாக இருந்தார்.

2008 ஆம் நடந்த 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்திய பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ICC போட்டிகளின் போது மட்டுமே எதிர்கொள்கின்றன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website