சென்னையை அடுத்த காட்டான்கொளத்தூரில் கையில் பட்டாக்கத்தி துப்பாக்கிகளுடன் மோதிக்கொள்ளும் SRM கல்லூரி மாணவர்கள் !! சமூகவலைத்தளங்களில் பரவும் வீடியோ !!
சென்னையை அடுத்த காட்டான்கொளத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் ரகளை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபலமான காலேஜ்களில் ஒன்று எஸ்ஆர்எம். இந்த பல்கலைக்கழகத்தில், பல மாநிலங்களில் சேர்ந்த மாணவர்கள் வந்து இங்கு தங்கி படித்து வருகிறார்கள். நேற்று மாலை மாணவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக MBA 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் காலேஜ் கேன்டீனுக்குள்யே அடித்து கொண்டனர்.
இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பிரிவு மாணவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது. மற்றொரு பிரிவு மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி இருந்தது. ஆளுக்கு ஒரு வீச்சரிவாளை எடுத்து கொண்டு ருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை பார்த்த சக மாணவர்களும், கேன்டீனில் சாப்பிட்டு கொண்டிருந்த ஊழியர்களும் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினார்கள். இந்த சம்பவத்தை எல்லாவற்றையும் காலேஜ் மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.
இதை பார்த்த வண்டலூர் போலீசார் அப்பகுதி துணை எஸ்பி உட்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.