சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல திரையுலக பிரபலங்களின் நேற்றைய புகைப்படங்கள் !!
ஏப்ரல் 5-ம்தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி இன்றிரவு சரியாக 9 மணிக்கு இந்தியாவில் உள்ள மக்கள் தங்களது வீட்டில் மின்சார லைட்டுகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றினர்.
இந்த விளக்கேற்றும் நிகழ்வில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் முன்பு கையில் மெழுகுவர்த்தியுடன் நன்றி தெரிவித்தார். மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கேப்டன் விஜயகாந்த், நடிகை தமன்னா, இளைய திலகம் பிரபு மற்றும் பலர் கையில் விளக்கேந்தி நின்றனர்.