அகரம் அறக்கட்டளையை நடத்துவதற்காக, நடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விருது !!
2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவால் அகரம் பவுண்டேசன் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
விகடன் குழுமத்தினர் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விருதை பெற்ற பிறகு சூர்யா தனது நன்றிகளை தெரிவித்தார். அதில் அவர், முதல் தலைமுறையினராக கல்வி வாய்ப்பு வேண்டி காத்திருக்கும் சாமானியர்களின் வீட்டுக் குழந்தைகள் கல்வி பெற அகரம் பவுண்டேஷன் செய்துவரும் பணிகளுக்கு உறுதுணையாய், விகடன் விருது அளித்திருப்பது உற்சாகம் தருகிறது.
சூர்யா மட்டுமல்லாமல் அவரது தந்தை நடிகர் சிவக்குமார் அவருடைய கல்வி அறக்கட்டளை மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிரார். 1979 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை நடிகர் சிவக்குமார் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையோடு இளைய மகன் நடிகர் கார்த்திக்கும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.