தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தாக்கம், மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசு கொரோனவை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
ஏற்கனவே 26 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், “திருச்சியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்தவர். அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இதுவரை தமிழ்நாட்டில் இதுவரை 27 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.