தென்காசியை தலைமையக கொண்ட புதிய 33வது மாவட்டம்! முதல்வர் பழனிச்சாமி இன்று அடிக்கல் நாடினார்.
திருநெல்வேலி: தமிழக அரசு புதிய மாவட்டங்கள் மற்றும் வருவாய் கோடுகளை பிரித்து புதிய மாவட்டங்களை நிறுவும் செயல்பாடுகளை செய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு 32வது புதிய மாவட்டம் அமையவுள்ளது, 8 தாலுக்கா கொண்ட இந்த மாவட்டம் உருவாகிறது. தென்காசி, சங்கரன்கோவில் என 2 வருவாய் கோடுகள் பிரிக்கப்படுகிறது.
இன்று காலை 9.30 தென்காசியில் அசாத் நகரில் உள்ள இசக்கி மஹால் வளாகத்தில் நடக்கிறது. வரவேற்புரையை செயலாளர் சண்முகம் வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பண்ணீர்செல்வம் தலைமை தாங்கினார்.
முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அரசு நலத்திட்டங்கள் உதவிகளை அறிவித்து அடிக்கல் நாடினார். அமைச்சர்கள் உதயகுமார், ராஜலக்ஷ்மி திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி எஸ் பி சுகுணா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.