தல அஜித்துடன் நடிக்க மறுத்த தனிஒருவன் அரவிந்த்சாமி ! காரணம் இதுதானாம் !!!
தல60-ல் நடிக்க மறுத்த நடிகர் அரவிந்த் சாமி, அஜித்துடன் இவர் நடித்திருந்தால் படம் வேற லெவல்ல இருந்திருக்கும் என ரசிகர்கள் வருத்தம்!
இந்த ஆண்டு வெளியாகி செம்ம ஹிட் கொடுத்த படம் நேர்கொண்ட பார்வை அதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் உடன் இரண்டாவது முறையாக தல அஜித் கைகோர்த்துள்ள படம் தல60. இந்த படத்தின் பூஜை நடைபெற்ற அன்று இப்படத்திற்கு “வலிமை” என படக்குழு பெயர் வைத்தது. இப்படத்திற்காக அஜித் பிஃட் ஆக மாற நேரம் எடுப்பதால் இன்னும் பட பிடிப்பு ஆரம்பிக்க படவில்லை.
இந்நிலையில், தனிஓருவன் படத்தின் மூலம் வில்லனாக கலக்கிய நடிகர் அரவிந்த் சாமியை தல60 -ல் நடிக்க இயக்குனர் வினோத் கேட்டிருக்கிறார். ஆனால் அரவிந்த் சாமி தற்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜே. ஜெயலலிதா அவர்களின் வாழக்கை வரலாற்று படமான” தலைவியில் “நடிக்க கமிட்டாகி இருப்பதால் இந்த படத்தில் நடிக்க அவர் மறுத்துள்ளாராம்.
ஒரு வேலை தல60-ல் அரவிந்த் சாமி தல அஜித்துடன் நடித்திருந்தால் , படம் செம்ம மாஸ் ஆகா இருந்திருக்கும் என சினிமா ரசிகர்கள் வட்டாரம் வருத்தம் தெரிவித்துள்ளது .