சங்கடத்தில் வலிமை பட இயக்குனர்… அப்படி என்ன செய்தார் அஜித்…!!?
தல அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் தலயின் 60வது படம் ” வலிமை”. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். அண்மையில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தல அஜித்தின் புதிய கெட்டப்பில், தாடி முழுவதும் எடுத்துவிட்டு மீசையை இறக்கி விட்டு கொஞ்சம் நடுத்தரமான வயது தோற்றத்திலும் …கட்டான தோற்றத்தில் கருப்பு நிற முடியுடனும் போலிஸ் கெட்டப்பில் உள்ள புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. வெவ்வேறு தோற்றத்தில் ட்ரெண்டான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக எண்ணி சந்தோஷத்தில் இருந்தனர்.
ஆனால், தற்போது அதுபற்றி உண்மை வெளிவந்துள்ளது. அதாவது அஜித் வலிமை பட கெட்டப்பில் ஏர்போர்ட்கலீல் போகும் போது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வதால் கெட்டப் ரகசியம் கசிந்து விடுகிறதாம். இதுவரை 3 கெட்டப்களை மாற்றியும் அத்தனையும் லீக் ஆகிவிட்டது. எனவே வளர்ந்து வரும் இயக்குனரான வலிமை பட இயக்குனர் வினோத் இதனை எப்படி அஜித்திடம் சொல்வது என தெரியாமல் பெரும் சங்கடத்தில் உள்ளாராம்.