நண்பர் அஜித் போல டிரஸ் பண்ணிட்டு வந்தேன் – அரங்கத்தை அலறவிட்ட தளபதி விஜய்
நேற்று மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய தளபதி விஜய் பொடியில் பேசியது வைரலானது.
என் ரசிகர்கள் இந்த விழாவிற்கு வரமுடியாமல் வருத்தப்படுற அதே வருத்தம் எனக்கும் இருக்கு. அதுக்கு முக்கிய காரணம், இதற்கு முன்பு நடந்த விழா மற்றும் ஆடிட்டோரியம் வெளியே நடந்த விஷயங்கள் தான். அதுனால தான் அரை மனசா தான் ஒத்துக்கிட்டேன்.”
“ஒவ்வொரு தடவையும் மோசமா டிரஸ் பன்றேன்னு இதை கொடுத்தார்கள். இன்று நம்ம நண்பர் அஜித் போல டிரஸ் பண்ணிட்டு போலாம்னு கோட் சூட் போட்டு வந்திருக்கேன்” என்று விஜய் பேசினார். தல அஜித் பற்றி கூறியதும் அரங்கமே அதிர்ந்தது.
தமிழ் சினிமால ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் விஜய் சேதுபதி உள்ளார். ஒரு நாள் கேட்டேன் அவர் இந்த படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டாருனு. ஸ்மைல் பண்ணிட்டு நாலு வார்த்தைல சொல்லிட்டார். ‘எனக்கு உங்கள் ரொம்ப புடிக்கும்’. அப்போது தான் தெரிந்தது அவர் எனக்கு பெயரில் மட்டும் இடம் கொடுக்கவில்லை, மனதிலும் இடம் கொடுத்துள்ளார் என்று. ரொம்ப நன்றி நண்பா.” இறுதியாக விழா நிறைவில் தளபதி விஜய் படக்குழுவினருடன் செலஃபீ எடுத்துக்கொண்டார்.