தளபதி ரசிகர்களின் வெறித்தனம்! தளபதி விஜய்-க்கு சிலை
கன்னியாகுமரி: சூரிய உதயம், சூரிய மறைவு மற்றும் முக்கடல் இணைப்பு போன்ற பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்று கன்னியாகுமரி ஆகும். கன்னியாகுமரி இரயில் நிலையத்தின் அருகில் மாயாப்புரி மெழுகுச்சிலை அருங்காட்சியம் உள்ளது. அதில் அப்துல்கலாம், மன்மோகன்சிங், அமிதாப்பச்சன், அன்னை தெரசா, ஒபாமா, மோகன்லால், ஷாருக்கான் போன்ற பிரபலங்களின் மெழுகுச்சிலை சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இங்கு நடிகர் தளபதி விஜயின் மெழுகுச்சிலை வைக்கப்ப்பட்டுள்ளது. இதுவே தமிழ் நடிகருக்கு வைக்கப்படும் முதல் சிலை ஆகும். இப்புகழ்பெற்ற அருங்காட்சியத்தில் விஜயின் சிலை வைக்கப்பட்டமையால் விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்று தளபதியின் மக்கள் இயக்க தொண்டர்களால் விஜயின் மெழுகுச்சிலை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். ரசிகர்களும் அருங்காட்சியத்தை பார்வையிடும் மக்களும் விஜயின் மெழுகுச்சிலையின் அருகில் சென்று புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.