EMI கட்டலான, ஆபாசமா பேசுவியா ?? கையில் அரிவாளுடன் பைனான்ஸ் அலுவலகத்தில் ரகளை !!
தேனி மாவட்டம் கம்பம் வடக்குப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக தவணை முறையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். இந்த பொருட்களுக்கான ஜனவரி மாத தவணை தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் போனில் தொடர்பு கொண்டு தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர். குடும்ப சூழல் பணம் செலுத்த தாமதமாகும் என பெண் கூறவே அதனை மறுத்த ஊழியர்கள் அந்த பெண்ணை, திட்டியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் தன்னை பஜாஜ் நிதி நிறுவன ஊழியர்கள் ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாக கணவரிடம் முறையிட்டுள்ளார்.
இதனைக்கேட்டு கணவர் கண்ணன் ஆத்திரம் அடைந்து, பஜாஜ் நிதி நிறுவனத்திற்கு கையில் அரிவாளுடன் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் அங்கிருக்கும் நிறுவன ஊழியர் ஒருவரை வெட்டுவதற்காக அரிவாளை வீசினார். பின்னர் ஆபாசமாக அங்கிருந்து திட்டிவிட்டு வெளியேறினார்
இந்த சம்பவத்தை அலுவலக ஊழியர்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனையடுத்து பஜாஜ் நிறுவன ஊழியர் விவேக் என்பவர் கண்ணன் மீது கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்த கம்பம் வடக்கு காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.