டிக்-டாக் பழக்கத்தால் கர்பம் அடைந்த மாணவி தற்கொலை !! டிக் டாக்-ஐ தடை செய்ய வேண்டிக்கொண்ட பெற்றோர்
டிக் டாக் செயலிக்கு பலர் அடிமையாகியுள்ளனர். ஆண் பெண் என பெரும்பாலானோர் ஆபாசமாக வீடியோவில் ஆடுவது பேசுவது போல் நடித்து பதிவிட்டு வருகின்றனர். லைக் காக ஏங்கும் இவர்கள் அட்டகாசம் இன்னும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. டிக் டாக் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டார். இதனால் சமுதாயத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிப்படுகிறது.
சமீபத்தில் திருப்பூர் கொடுவாய் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவிக்கும், பல்லடத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற வாலிபரும் டிக்-டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் மாணவியை காதல் வலையில் சிக்க செய்த வேல்முருகன், அவரிடம் நெருக்கம் ஏற்பட்டு மாணவி கர்ப்பம் அடைந்தார். 2 மாதம் கர்பம் அடைந்த மாணவி மனவேதனையால் கடந்த மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். டிக்-டாக் மூலம் வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், டிக்-டாக் செயலியை தடை செய்ய கோரி மாணவியின் பெற்றோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.