“எனக்கு வேணாம்”…., சூப்பர் ஸ்டார் படத்தை தூக்கி வீசிய திரிஷா !!
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 16 வருடமாக தமிழ் திரையுலகின் ரசிகர்கள் மனதில் நீங்கா இதன்பித்திருக்கிறார். இவர் கைவசம் வரிசையாக பல படங்கள் உள்ளன. பரமபதம் விளையாட்டு, பொன்னியின் செல்வன், ராக்கி, கர்ஜனை ஆகிய படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
த்ரிஷா தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா என்னும் படத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்பட்டது. கொரட்டல சிவா இதனை இயக்குகிறார். கடந்த வாரம் ஆச்சார்யா ஷூட்டிங்கிலும் திரிஷா பங்கேற்றார் என கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் இருந்து தற்போது திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
செம்ம கோபத்தில் இருக்கும் திரிஷா ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சில சமயத்தில் ஆரம்பத்தில் சொல்வது ஒன்று பின்னர் நடப்பது வேறொன்று. படக்குழுவுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நான் சிரஞ்சீவி சார் படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.
மேலும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். என அன்பான தெலுங்கு ரசிகர்களுக்கு – உங்களை இன்னொரு படம் வாயிலாக சந்திக்கிறேன்” என திரிஷா ட்விட் செய்துள்ளார். இந்த சம்பவம் த்ரிஷாவை பெரிதும் பாதித்துள்ளது. சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் விலகி இவ்வளவு தைரியமாக தனது கருத்தை பதிவு செய்த திரிஷாவுக்கு பொன்னாயின் செல்வன் படம் அவர் சினிமா வாழ்க்கையில் ஒரு மையில்கல்ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.