கொரோனவை எதிர்கொள்ள கையில் துப்பாக்கியுடன் கிளம்பிய உ.பி பாஜக மஞ்சு திவாரி
நேற்று இரவு ஒன்பது மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியை சேர்ந்த பாஜக மகளிர் அணி தலைவர் மஞ்சு திவாரி, தன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வானத்தை நோக்கி சுட்டார். ஒன்பது மணிக்கு விளக்கு அல்லது டார்ச் பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் இவருக்கு நரேந்திர மோடி கூறியது என்னவென்று புரியாமல் கையில் துப்பாக்கியை எடுத்து கொரோனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க மேல்நோக்கி சுட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணி அளவில் பிரதமரின் அறிவிப்பின்படி ஒன்பது நிமிடங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின்சார விளக்குகளையும் அணைத்து. கையில் டார்ச் மற்றும் விளக்குகளை ஏந்தி நின்றனர். சில இடங்களில் பட்டாசு வெடித்தும் கையில் தீப்பந்தம் என்றும் கூட்டம் கூட்டமாக தெருவில் சென்றனர்.
தெலுங்கானாவில் ராஜா சிங் என்ற பாஜக எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் கையில் தீப்பந்தங்களை யேந்தி “சீனா வைரஸ் ஓடிப்போ” !! என தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.