முதல் முறையாக இவர்களை பற்றி பேசிய விஜய் சேதுபதி!
சினிமாவில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தையும் ஈஸியாக நடிக்கும் வல்லமை பெற்றவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் தெலுங்கு சினிமாவில் சயிரா நரசிம்ம ரெட்டி என்னும் படத்தில் சிரஞ்ஜீவியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அண்மையில் அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி முதல் முறையாக தனக்கு பிடித்த நடிகர்கள் பெயர்களை பட்டியலிட்டு மேலும் அவர்களுடன் உரையாட விரும்புவதாக தெரிவித்தார். முதலில் அவர் சிவாஜிகணேசன் பெயரை கூறி அவர் எல்லா கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் வகையில் தத்ரூபமாக நடிப்பார், இரண்டாவதாக கமல் ஹாசனின் நேர்த்தியான நடிப்பு பிடிக்கும், மூன்றாவதாக மோகன்லால் எந்த கதாபாத்திரத்தையும் ஈஸியாக நடிப்பார் என கூறினார்.
விஜய் சேதுபதி தனக்கு எம்ஜிஆர் ரொம்ப பிடிக்கும் என கூறினார். அவர் கதை தேர்தெடுக்கும் விதம் மக்கள் ரசனைக்கேற்ப இருக்கும் என கூறினார். தெலுங்கில் விஜய்சேதுபதி கால்பதித்த பிறகு ஹிந்தியில் தற்போது அமீர் கான் உடன் லால் சிங் சதார் படத்தில் நடிக்கவுள்ளார். லால் சிங் சதார் அடுத்த வருடம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது