“எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ” வீட்டில் பட்டப்பகலில் ஏற்பட்ட சோகம் விழுப்புரத்தில் நடந்துள்ள கொடூரக்கொலை !!!

December 8, 2019 at 12:04 pm
pc

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டப்பகலில் தனியாக இருந்த பெண் மர்ம நபர்களால் எரித்து கொல்லப்பட்டு கிடந்தார் . கொலையாளிகளுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர் .

விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் கரிகாலன் தெருவில் நடராஜன் -இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நடராஜன் திருக்கோவிலூர் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தால் நடராஜன் திருக்கோவிலூரை சேர்ந்த லீலா என்பவரை 2 வது திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு வேலாயுதம் எனும் 23 வயது மகன் உள்ளான் . இவர் தனி வீட்டில் வசித்து வந்துருகிறார் . இந்திரா சுதாகர் நகர் பகுதியில் உள்ள காய்கறி கடை வைத்தும் , பணத்தை வட்டிக்கு கொடுத்ததும் சம்பாதித்து வருகிறார் .

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 7மணியளவில் லீலாவை பார்பதற்க்காக நடராஜன் திருக்கோவிலூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் . அப்போது வீட்டில் எரிந்து கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார் இந்திரா . அதிர்ச்சியடைந்த நடராஜன் உடனே விழுப்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் . விரைந்து வந்த போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர் . ஆய்வில் இந்திராவின் பின்பக்க தலையில் பலத்த அடிபட்டு ரத்த காயம் இருந்தது தெரியவந்தது . இதன் அடிப்படையில் அவரை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி பின்னர் அங்கிருந்த துணிகளை அவர்மேல் எரித்துள்ளதை போலீசார் உறுதிப்படுத்தினார் .

பின்னர் இந்திராவின் உடலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் . இந்திராவின் கொலையை பற்றி விசாரித்து வருகின்றனர் .முன்விரோதம் காரணமாகவா அல்லது வட்டிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் ஏதேனும் தகராறா என்ற பாணியில் விசாரணை நடந்து கொண்டுவருகிறது .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website