அடுத்தடுத்து முட்டி மோதிக்கொண்ட 60 கார்கள், கண்ணை மறைத்த பனிமூட்டத்தால், 51 பேர் படுகாயம் !!

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் ஏற்பட்ட கடும் பனிபொழிவால் 60க்கும் மேற்பட்ட கார்கள் அடுத்தடுத்து ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டதில் 51 படுகாயமடைந்தனர் .
அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகாணத்தில் டிசம்பர் மாதம் என்பதால் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் 22ம் தேதி, அங்கு உள்ள வில்லியம்ஸ்பேர்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் முன்னால் செல்லும் வாகனங்களை தெளிவாக அறிய முடியாமல் திக்குமுக்காடி போனார்கள். அதிக பனிமூட்டம் காரணமாக அந்த வழியே சென்ற 69 கார்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் சுமார் 51 பேர் படுகாயமடைந்தனர். எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை. இந்த விபத்தால் உடனடியாக நெடுஞ்சாலை மூடப்பட்டது. மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். சுமார் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாது விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள யார்க்கவுண்டி பகுதியில் இருக்கும் இன்டெர்-ஸ்டேட் 64வது நெடுஞ்சாலையில் இருந்து 80கிமீ தொலைவில் உள்ள பகுதியிலும் கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.