இந்தியன் 2-வில் நடிக்கிறாரா கிரிக்கெட் வீரர் பிராவோ ? கமல் ஹாசனை இன்று சந்தித்தார் !
சமீபத்தில் சார்வதேச வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ட்வயன் பிராவோ-வுக்கு BEHINDWOODS “குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரஷன்” வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அடுத்து இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனை சந்தித்தார். ஜூலை 2016-ல் எலும்பு முறிவு ஏற்பட்டதால் வலது காலில் வைக்கப்பட்டிருந்த உள்வைப்பை அகற்றுவதற்காக கடந்த NOV 22-ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் கமல் ஹாசனை மரியாதை நிமித்தமாக பிராவோ சந்தித்தார். பிராவோ மற்றும் கமல் ஹாசன் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகின்றது. படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ராகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜம்வால் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், பிராவோ உடனான திடீர் சந்திப்பு, இந்தியன் 2 படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு உள்ளதா என சினிமா வட்டாரம் கிசுகிசுகிறது. பிராவோ ஏற்கனவே சித்திரம் பேசுதடி 2 என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியது குறிப்பிடத்தக்கது.