“ஷூவுக்குள் இருந்த விஷம்” எதிர்பாராத விதமாக நடந்த சோகம் உயிரைவிட்ட இளம்பெண் !!!
ஷூவுக்குள் இருந்த பாம்பை கவனிக்காமல் தொட்ட பெண் உடல் முழுவதும் விஷம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கே.கே.நகரில் பழனி – சுமித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். பழனி தச்சு வேலை செய்து வந்துள்ளார். சுமித்ராவிற்கு 35 வயதாகிறது. நேற்று முன்தினம் சுமித்திரா வழக்கம் போல வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது அங்கிருந்த ஷூவை சுத்தம் செய்வதர்காக கையை ஷூவுக்குள் விட்டுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஷூவுக்குள் பதுங்கி இருந்த 2 அடி நீள பாம்பு சுமித்ராவை கடித்துவிட்டது. எதிர்பாக்காத நேரத்தில் பாம்பு கடித்தவுடன் வலியை தாங்கமுடியாமல் சுமித்ரா கதறி அழுதுள்ளார். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது, இருப்பினும் அவர் சிகிக்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சுமித்ராவிற்கு பாம்பு கடித்த உடனே உடம்பெல்லாம் விஷம் எறியுள்ளது. இதனால் விஷம் அவரது நரம்புமண்டலத்தை பாதித்துள்ளது. அதனால் தான் சிகிச்சை பலனளிக்கவில்லை. பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட ரத்தம் 20 நிமிடங்களை கடந்தும் உறையவில்லை. இந்த சமயத்தில் மூச்சுதிணறல் ஏற்பட்டதால் சுமித்ரா உயிரிழந்தார் என தெரிவித்தனர்.
இளம்பெண் உடம்பெல்லாம் விஷம் ஏறி எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.