அமெரிக்காவின் 2வது பலம் வாய்ந்த கோர்ட்டில் தலைமை நீதிபதியாக தமிழர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் நியமனம் !!

February 21, 2020 at 9:03 pm
pc

அமெரிக்காவின் கொலம்பியா சர்கியூட் அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீகாந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கோர்ட் அமெரிக்காவில் 2வது முக்கியமான நீதிமன்றமாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் சுபரீம் கோர்ட்டுக்கு அடுத்த நிலையில் இருப்பது கொலம்பியா சர்கியூட் அப்பீல் கோர்ட்டு ஆகும். இந்த கோர்ட்டின் தலைமை நீதிபதி பதவிக்கு 52 வயதான அமெரிக்க வாழ் தமிழர் ஸ்ரீகாந்த் “ஸ்ரீ” சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் முழுப்பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் சீனிவாசன் ஆகும்.

ஸ்ரீனிவாசனின் தந்தை பத்பநாபன் சீனிவாசன், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக் கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா, அதே பல்கலைக் கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியையாக இருந்தார்.

ஸ்ரீகாந்த் சீனிவாசன் சண்டிகார் என்னும் ஊரில் பிறந்தார். இவரது குடும்பம் 1960-களில் அமெரிக்காவில் குடியேறியது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் பட்டப்படிப்பை முடித்தார் மேலும் அதே பல்கலைக்கழகத்தில் சட்டப்பட்டமும் முடித்தார். எம்.பி.ஏ. பட்டமும் பெற்றிருக்கிறார். அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக இருந்தவர். 2011-ம் ஆண்டு முதல் முதன்மை துணை அட்டார்னி ஜெனரல் பதவி வகித்தார்.

ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் இவர் தமிழ் வம்சாவளியை சார்ந்த இந்தியர் என்பது பெருமைக்குரியது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website