WWE முன்னாள் வீராங்கனை மரணம்…

May 6, 2023 at 10:50 pm
pc

அமெரிக்காவின் பிரபல நட்சத்திர மல்யுத்த வீராங்கனையாக திகழ்ந்தவர் சாரா லீ(30). இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மர்மமான நிலையில், தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாரா லீ-இன் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு குத்துச்சண்டையான WWE-ன் “Tough Enough” நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் சாரா லீ வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாரா லீக்கு வெஸ்லி பிளேக் என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website