இப்படி நடித்ததுக்கா இவங்களுக்கு விருது தராங்க !! என வாயை பிளக்கும் நெட்டிஸ்ன்ஸ் !!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரத்தையே தேர்தெடுத்து நடிக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த சாம்பி படம் வெளியாக பெரிதாக வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது ஆனால் இளசுகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சாம்பி படத்தில் நடித்ததற்காக யாஷிக்காவிற்கு எம்ஜிஆர் – சிவாஜி விருது கொடுத்து கௌரவித்துள்ளனர். அந்த விருதுடன் யாஷிகா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நன்றி என்று தெரிவித்துள்ளார். இதனால் பலர் கொந்தளித்துள்ளனர். இவர் அப்படி என்ன நடித்துட்டார் என சாமுவலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.