“தனியாக வீட்டில் இருந்த சிறுமியிடம் இளைஞர் சில்மிஷம்” பாய்ந்தது போக்சோ!! கேரளாவில் பரபரப்பு !!

கேரளாவில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த இளைஞனின் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை.
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் கஞ்ஜிசிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது வீட்டில் உள்ளவர்கள் வேலை விஷயமாக அனைவரும் வெளியில் சென்றுள்ளார்கள். அந்த சமயத்தில் சிறுமியின் வீட்டிற்கு அவளின் அண்ணனின் நண்பன் என கூறிக்கொண்டு அருண் சுரேஷ் எனும் 25 வயது நபர் வந்துள்ளான். அப்போது சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட அவன், தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணீர் தருமாறு சிறுமியிடம் கேட்டுள்ளான். தனது அண்ணனின் நண்பர் என கூறியதால் சிறுமியும் அவனை நம்பி தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றிருக்கிறாள்.
இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞன், சிறுமியின் பின்னாடியே வீட்டிற்குள் சென்றுள்ளான். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யவும், சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும், அந்த இளைஞன் பயந்து ஓடியுள்ளான். அதன்பின் சிறுமி தனது பெற்றோருக்கு தகவலை கூறவும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். தகவலறிந்த போலீசார் புகாரின் பேரில் சுரேஷுக்கு வலை வீசி தேடியுள்ளனர். இந்நிலையில் கோட்டயத்தில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஒளிந்திருந்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து போலீசார் அவனை கையும் களவுமாக பிடித்தனர். 13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக நாசம் செய்த அந்த கொடூரன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.