Youtube மூலம் மாதம் பல கோடி சம்பாதிக்கும் 8 வயது சிறுவன்! எத்தனை கோடி தெரியுமா??

உலக அளவில் யூ டியூப் மூலமாக சேனல் நடத்தி அதிகளவு வருமானம் ஈட்டி வரும் நபர்களின் பட்டியலை அமெரிக்க நாட்டின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தின் சார்பாக வருடம் தோறும் வெளியிடப்படும்.
அந்த வகையில்., இந்த வருடத்திற்கான பட்டியலானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க நாட்டினை சார்ந்த ரியான் காஜி என்ற 8 வயதாகும் சிறுவன்., தனது யூ டியூப் சேனல் மூலமாக 26 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.185 கோடி) வருட வருமானமாக சம்பாதித்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளான்.
மேலும்., ரியானின் பெற்றோர் கடந்த 2015 ஆம் வருடத்தின் போது “ரியானின் உலகம்” என்ற யூ டியூப் சேனலை துவங்கி., சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மையை மதிப்பாய்வு செய்து ரியான் மூலமாக விடீயோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்தனர்.
இந்த சேனலுக்கு 2 கோடி 30 இலட்சம் சந்தாதாரர்கள் உள்ள நிலையில்., ரியானுடைய பல விடீயோக்களை 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ரியானின் விடீயோக்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து ரியான் தற்போது சிறிய அளவிலான அறிவியல் பரிசோதனை செய்து வீடியோ பதிவு செய்து வருகிறான். இதனைப்போன்று ரஷிய நாட்டினை சார்ந்த 5 வயதுடைய சிறுமி அனுஷ்டாசியா 18 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.128 கோடி) வருமானத்துடன் 2 ஆவது இடத்தினை பிடித்துள்ளார்.