அதிகமுறை 200 ஓட்டங்களை குவித்து சாதனைப் படைத்த சிஎஸ்கே – குவியும் வாழ்த்து!

April 18, 2023 at 1:15 pm
pc

ஐபிஎல் போட்டியில் அதிகமுறை 200 ஓட்டங்களை குவித்து சாதனைப் படைத்த சிஎஸ்கே அணிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

பெங்களூருவை வீழ்த்திய சிஎஸ்கே அணி 

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இப்போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 

முதலில் ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் சென்னையை துப்பாட்டம் செய்ய அழைத்தார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிட்ஸ் அணி துப்பாட்டம் செய்ய களத்தில் இறங்கியது.

இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்தது. இதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகவும் பதிவானது. இதனையடுத்து, 227 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களத்தில் இறங்கியது.

இறங்கிய முதல் ஓவரிலேயே பேரிடி விழுந்தது. விராட் கோலி 6 ரன்னில் போல்டு ஆனார். இப்போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்களே எடுத்தது.

இதனால், சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது லீக்கில் ஆடிய சென்னைக்கு இது 3-வது வெற்றியாகும். பெங்களூருவுக்கு இது 3-வது தோல்வியாகும்.

சிஎஸ்கே அணி சாதனை

இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (25 முறை) 200 ஓட்டங்களுக்கு மேல் ஓட்டங்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. 2-வது இடத்தில் பெங்களூரு அணியும், (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் அணியும் (17 முறை) இடம் பிடித்துள்ளது. 

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு விசில் போடுங்கள் என்று வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website