அமேசானில் வெளியாகப்போகும் மாஸ்டர்.. அடேய்! அப்பனா பட்டாசு, பால் அபிஷேகம்லாம் வீட்லதானா
தளபதி விஜய்யின் படம் என்றாலே பல சோதனைகளை தாண்டிதான் களம் காணும் என்பது உண்மை. ஏனென்றால் அரசியல் களத்தை அவர் நெருங்கி விடக் கூடாது என்று பின்னணியில் பல செயல்கள் நடக்கும் அதில் ஒன்றுதான் தற்போது விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை மற்றும் பல.
ஏற்கனவே இதை நிறைய அலசி விட்டோம், தற்போது விதி விளையாடி கொண்டிருக்கின்றது. மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்து வரும் 9ம் தேதி படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பெரிய மற்றும் சிறிய படங்கள் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் வெளியீடு மே30ஆம் தேதி வெளிவரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது ஊரடங்கு உத்தரவால் மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவாக வெளிவர வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கு அதிக வட்டியில் பணம் வாங்கி படத்தை முடித்து விட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். இதனால் கூட விரைவில் படத்தை வெளியிட வேண்டும் என்ற கட்டாயத்தில் படக்குழு இருப்பதாக தெரிகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியே வந்தால் மட்டுமே தெரிய வரும். எது எப்படியோ தளபதி விஜய்யை பெரிய திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே கமலஹாசன் படங்களை டிடிஹெச், ஆன்லைன் போன்றவற்றில் ரிலீஸ் செய்யுமாறு கோரிக்கை வைத்து வருகிறார். அதனை மாஸ்டர் செயல்படுத்திவிடுமோ என்று ரசிகர்கள் பயப்படுகின்றனர். இது கூட விளம்பரத்திற்கான ஒரு செய்தியாக பரவ விட்டுருக்கலாம் ஆனால் உண்மையானால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.