அம்பானி குடும்பத்தினருக்கு நன்றி..ஸ்பைடர்மேன் ஹீரோவின் பதிவு

April 2, 2023 at 5:59 pm
pc

முகேஷ் அம்பானியின் கலாச்சார மையத்தின் துவக்க விழாவிற்கு, ஸ்பைடர்மேன் நடிகர் டாம் ஹாலண்ட், சக நடிகை ஸிண்டயா வருகை புரிந்த புகைப்படம் உலகளவில் வைரலானது.

கலாச்சர மையத்தின் திறப்பு விழா 

நீதா அம்பானியின் கனவு திட்டமான கலாச்சார மையத்தின் துவக்க விழா சமீபத்தில் நடந்தது. இதில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக் கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல் சிறப்பு அழைப்பின் பேரில் ‘ஸ்பைடர் மேன்’ புகழ் நடிகர் டாம் ஹாலண்ட் தனது காதலியும், நடிகையுமான ஸிண்டயாவும் வருகை புரிந்தார். 

அவர் அம்பானி குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அம்பானிக்கு ஸ்பைடர்மேனின் நன்றி

இந்த நிலையில் டாம் ஹாலண்ட் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘திறப்ப விழாவை கொண்டாட எங்களை அழைத்த அம்பானி குடும்பத்தினருக்கு நன்றி. இது என்னால் மறக்க முடியாத அற்புதமான அனுபவம்’ என புகைப்படத்தைப் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலாச்சார மையம் இசை, நாடகம், நுண்கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி என பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website