அரசு பேருந்து ஏறி மூதாட்டி தலை நசுங்கி பலி -கதறும் பேரன்..!

April 13, 2023 at 5:39 pm
pc

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சுடலை – முத்தம்மாள் தம்பதியர். சுடலை அப்பகுதியில் பனையேறும் தொழில் செய்து வருகிறார்.

அவர்கள் இருவரும் அவர்களது பேரன் உதயசங்கரை அழைத்துக் கொண்டு செய்துங்கநல்லூரில் நடைபெறும் வாரச்சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்கள் செய்துங்கநல்லூர் கீழதூதுகுழி அருகே சென்ற போது அவர்களின் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையில் இருந்த பேரிகார்ட்டில் மோதியது.

அதில் முத்தம்மாள் (60) கீழே தவறி விழுந்து விட்டார். அதே சமயத்தில் கால்வாய் கிராமத்திற்கு சென்று விட்டு அரசு பேருந்து ஒன்று திரும்பி வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து கீழே விழுந்த மூதாட்டி முத்தம்மாள் தலையில் ஏறி இறங்கியது.

அதில் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் சுடலையும் பேரன் உதயசங்களும் விபத்தில் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்துங்கநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான காவல்துறையினர் படுகாயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மூதாட்டி முத்தம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி கீழே விழுந்த போது பேருந்து அவரது தலையில் ஏறி அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website