இந்த பாப்பா என்னமா குத்து குத்துது… குவாரன்டின் டைம் – சம்யுக்தா ஹெகிடே
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அரசங்கத்துக்கு ஒத்துழைப்பௌ அளித்து மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அதேபோல் நடிகர் நடிகைகளும் தங்கள் வீட்டிலிருந்து சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்துவருகின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம் ‘கோமாளி’. இப்படம் ரசிகர்களிடையே, குறிப்பாக 90’ச் கிட்ஸ் இளைஞர்களிடையே பெரும் வரவேற்றது. இப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவியின் பள்ளி பருவத்து காதலியாக முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், ஜிவி பிரகாஷ் நடித்த ‘வாட்ச்மேன்’ மற்றும் வருண் நடித்த ‘நாய்க்குட்டி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த இவர் பல கன்னடம் படங்களிலும், கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றவர். உடற்பயிற்சி மற்றும் நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் சமுக வலைதளங்களில் எப்போதும் இயக்கத்தில் இருப்பவர்.
தனது ஒர்க்அவுட் வீடியோக்களைப் பகிர்வதில் பெயர் பெற்ற சம்யுக்தா ஹெக்டே, இப்போது இணையத்தில் ஒரு அருமையான டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்ட்தடில் அவர் “2-வது லாக்டவுன் நாள். இசை மற்றும் நடனம் என்னை குணமாக்குகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் என்னை மிகவும் நன்றாக உணரவைக்கிறது. ஒரு நடன வீடியோவை பதிவு செய்யவும் என்று என்னிடம் கேட்கும் எனது நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்காக ஒரு வீடியோ இதோ. இது எனக்கு பிடித்த ஒரு பாடலுடன், ஒரு ஃப்ரீஸ்டைல் நடனம்” என்று பதிவிட்டுள்ளார். சம்யுக்தாவின் ஆற்றல்மிக்க மற்றும் சிரமமில்லாத நடன நகர்வுகள் கொண்ட இந்த வீடியயோ தற்போது செம வைரலாகிவருகிறது.