“நடிகையின் குமுறல்” என்னை காசுக்காக விலை போனவள், கொலைகாரி என்றெல்லாம் மிரட்டுகிறார்கள் !

பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய வீட்டில் கடந்த மாதம் ஜூன் 14-ம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் இயற்கையானது அல்ல ரசிகர்கள் பல எதிர்ப்புகள் எழுப்பி வருகின்றனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் கூட அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்பதை போலீசாரால் கண்டறிய முடியவில்லை.

தற்போது சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி, “நீ காசுக்காக விலை போனவள் கொலைகாரி, நீ பாலியல் வன்கொடுமை செய்யப்படுவாய் என இன்ஸ்டாகிராமில் இருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக மும்பை சாண்டா கிருஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
மும்பை சாண்டா கிருஸ் பகுதி காவல்துறை துணை ஆணையர் அபிஷேக் திரிமுகே (மண்டலம்- IX), ”ரியா சக்ரபோர்த்தி புகாரின் பேரில் மிரட்டல் விடுத்த இரண்டு இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிராக ஆபாச செய்திகளை அனுப்பி அச்சுறுத்தியதாக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிரிவின் 507, 509 தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67 (ஆபாசப் பொருள்களை மின்னணு வடிவத்தில் வெளியிடுவதற்கு அல்லது கடத்துவதற்கான தண்டனை) 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.