கடைசியில் வேறு வழியின்றி’… “தமன்னாவும் அந்த நிலைக்கு வந்துவிட்டார்”.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் சூர்யாவின் வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் தான் உச்ச நடிகையாக திகழ்கிறார். கடந்த 12 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக உள்ளார்.
சில நடிகைகள் ஐந்து ஆறு வருடங்களில் இருக்கும் இடம் காணாமல் போகும் நிலையில் இவர் மட்டும் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் காமெடி , கவர்ச்சி , ஹோம்லி என அனைத்து கேரக்டரிலும் நடிக்க கூடியவர். சமீபத்தில் நடிகை தமன்னாவின் வாழ்க்கை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் ஓப்பனாக பேசிய தமன்னா
கேள்வி :
நீங்க வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களில் நடித்து வந்தீங்க இப்போது அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது மற்றவர்களைப் போல் அதிகமாக படங்களில் ஏன் நடிக்கவில்லை என கேட்கப்பட்டது.
பதில் :
நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களின் நிறைய நடித்து விட்டேன் . இன்னும் அதே மாதிரி நடிக்க வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் காரணத்தினால்தான் எனது படங்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என கூறினார்.
ஆனால், தற்போது மீண்டும் கவர்ச்சி காட்டி நடிக்க தயார் என தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.